Breaking News

ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றவர் மீது மின்சாரம் தாக்கி மருத்துவமனையில் அனுமதி

காஞ்சிபுரம், ஆக.17:

காஞ்சிபுரம் கம்மாளர் தெருவில் உள்ள ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றவர் மீது ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் தாக்கியதில் அவர் காயமடைந்து அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.



காஞ்சிபுரம் கம்மாளர் தெருவில் ஹெச்டிஎப்சி வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரம் செயல்பட்டு வந்தது.இந்த ஏடிஎம் இயந்திரத்தில் வெங்கடேசன் என்பவர் தனது 8 வயது மகனுடன் பணம் எடுக்க சென்றுள்ளார்.

வங்கி அட்டையை ஏடிஎம் இயந்திரத்தில் அழுத்தி விட்டு மீண்டும் எடுத்த போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் கீழே விழுந்தார்.

இதைப்பார்த்த அவரது மகன் அலறி அடித்துக்கொண்டு ஏடிஎம் இயந்திர அறையிலிருந்து வெளியில் ஓடி வந்ததைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக விஷ்ணுகாஞ்சி போலீஸôர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Thank you for your comments