மாநில தடகளப்போட்டிக்கு காஞ்சிபுரம் விளையாட்டு வீரர்களை தேர்வு செய்யும்போட்டிகள்,காஞ்சிபுரம் எஸ்பி தொடக்கி வைத்தார்
காஞ்சிபுரம், ஆக.17:
காஞ்சிபுரம் மாவட்ட தடகள விளையாட்டு சங்கம் சார்பில் மாநில அளவிலான ஜூனியர் தடகளப் போட்டிகளுக்கு விளையாட்டு வீர்களை தேர்வு செய்யும் போட்டிகள் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள திறந்த வெளி விளையாட்டரங்கில் நடைபெற்றது.தடகள சங்கம் காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைவர் பாஸ்கரபாண்டியன் தலைமை வகித்தார்.
காஞ்சிபுரம் எஸ்பி கே.சண்முகம் கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு தடகள விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து ஏற்கனவே தடகளப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கினார்.இதனைத் தொடர்ந்து இளையோருக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு விளையாட்டு வீரர்களை தேர்வு செய்யும் பணி தொடங்கியது.
காஞ்சிபுரத்தில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று தேர்வு செய்யப்படவுள்ள தடகள விளையாட்டு வீரர்கள் வரும் செப்டம்பர் மாதம் வண்டலூர் அருகேயுள்ள தமிழ்நாடு விளையாட்டு பல்கலையில் நடக்கவுள்ள மாநில அளவிலான ஜூனியர் தடகளப்போட்டி மற்றும் தேசிய தடகளப் போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.
மாநில அளவிலான போட்டிகளுக்கு விளையாட்டு வீரர்களை தேர்வு செய்யும் தடகள விளையாட்டுப் போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள்,வீராங்கனைகள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மாவட்ட தடகள சங்க செயலாளர் திருவளர்ச்செல்வன்,துணைத்தலைவர் வழக்குரைஞர் அரவிந்த்,தொழிலதிபர் கார்த்திகேயன் மற்றும் தடகளச்சங்க நிர்வாகிகள்,பயிற்சியாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments