Breaking News

காஞ்சிபுரத்தில் தமிழ்ச்செம்மல் விருதுக்கு ஆகஸ்ட் 25க்குள் விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம், ஆக. 7:



தமிழ் வளர்ச்சித்துறை, தமிழ் ஆர்வலர்களின் தமிழ்த்தொண்டினை பெருமைப்படுத்தி ஊக்கப்படுத்தும் வகையில் “தமிழ்ச்செம்மல்” விருதை வழங்கி வருகிறது. மாவட்டத்திற்கு ஒருவர் தெரிவு செய்யப்படுவார். விருது பெறுவோருக்கு சான்றிதழுடன் ரூ. 25,000 பரிசுத்தொகையும் வழங்கப்படும்.

நிகழாண்டிற்கான விண்ணப்பங்கள் காஞ்சிபுரம் மாவட்ட தமிழ் ஆர்வலர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை, தமிழ் வளர்ச்சித்துறையின் இணையதளம் மூலம் இலவசமாகப் பதிவிறக்கம் செய்யலாம். அல்லது, உதவி இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை அலுவலகத்தில் நேரிலும் பெறலாம்.

விண்ணப்பிப்பவர்கள், தங்கள் விபரக்குறிப்பு, இரு நிழற்படங்கள் மற்றும் ஆற்றிய தமிழ்ப்பணி பற்றிய விவரங்களுடன், உதவி இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை, வட்டாட்சியர் அலுவலக வளாகம், காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு, 25.08.2025க்குள் அனுப்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



Tamil Semmal Award Application Deadline Kanchipuram 2025

No comments

Thank you for your comments