காஞ்சிபுரம் வரதராஜர், ஏகாம்பரநாதர் கோயில் திருப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் – அறநிலையத்துறை அதிகாரி வேண்டுகோள்
காஞ்சிபுரம்,ஆக.16:
அத்திவரதர் புகழுக்கும்,108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகவும் இருந்து வருவது காஞ்சிபுரத்தில் உள்ள பெருந்தேவித்தாயார் சமேத வரதராஜசுவாமி கோயில்.இக்கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் ரூ.22.50 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது.
இதே போல காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் கோயில் திருப்பணிகள் ரூ.28 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது.இரு ஆண்டுகளாக இக்கோயில் திருப்பணிகள் நடைபெற்று அப்பணிகளில் 70 சதவிகிதம் நிறைவு பெற்றுள்ளது.
இவ்விரு கோயில் திருப்பணிகளும் நடைபெற்று வருவதை அறநிலையத்துறை கூடுதல் முதன்மை செயலாளர் க.மணிவாசன் நேரில் ஆய்வு செய்தார்.
கோயில் பட்டாச்சாரியார்கள், சிவாச்சாரியார்கள்,அதிகாரிகள், ஸ்தபதிகள் ஆகியோரிடமும் அவர் திருப்பணிகள் குறித்து விபரங்கள் கேட்டறிந்தார்.
இரு கோயில்களிலும் திருப்பணிகளை விரைந்து முடிக்குமாறும் அவர் கோயில் அலுவலர்களிடம் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வின் போது காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், காஞ்சிபுரம் சார் ஆட்சியர் ஆஷிக்அலி, அறநிலையத்துறை காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் குமாரதுரை, உதவி ஆணையர் கார்த்திகேயன்,வரதராஜசுவாமி கோயில் உதவி ஆணையர் ஆர்.ராஜலட்சுமி, ஏகாம்பரநாதர் கோயில் செயல் அலுவலர் ப.முத்துலட்சுமி ஆகியோரும் உடன் இருந்தனர்.
No comments
Thank you for your comments