உத்திரமேரூர் பேரூராட்சி சிறந்த பேரூராட்சியாக தேர்வு – எம்எல்ஏ சுந்தர் வாழ்த்து
காஞ்சிபுரம் :
நாடு முழுவதும் நேற்றைய தினம் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது அந்த வகையில் தமிழகத்திலும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்ட நிலையில் நேற்று தமிழக முதல்வர் சுதந்திர விழாவில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்கள் மற்றும் பல்வேறு ஊராட்சிகள் சிறப்பாக விளங்கியதற்கு நற்சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார்
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உத்திரமேரூர் பேரூராட்சி தமிழகத்திலேயே சிறந்த பேரூராட்சி என்று முதலிடமாக தேர்வு செய்யப்பட்டு நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டலின் அதற்கான சான்றிதழ் பேரூராட்சி மன்ற தலைவர் சசிகுமார் அவர்களிடம் வழங்கினார்
அதனைத் தொடர்ந்து இன்று காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுகழக செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான சுந்தர் எம்எல்ஏ அவர்களை சாலவாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் பேரூராட்சி மன்ற தலைவர் சசிகுமார் இன்று சந்தித்து சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றார்
இந்நிகழ்வில் பேரூர் செயலாளர் என்.எஸ்.பாரிவள்ளல், குணசேகரன், கோவிந்தராஜன் உள்ளிட்ட கழகத்தினர் உடனிருந்தனர்.
No comments
Thank you for your comments