Breaking News

காஞ்சிபுரம் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் – ஆக.29 நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

 காஞ்சிபுரம், ஆக.28:

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புறம் மற்றும் ஊரகப்பகுதிகளில் மொத்தம் 224 முகாம்கள் நடத்தப்படுகின்றன.

முதற்கட்டமாக ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14 வரை 78 முகாம்கள் நடைபெற்றன. தற்போது இரண்டாவது கட்டமாக ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 12 வரை நகர்ப்புறத்தில் 23 முகாம்களும், ஊரகப்பகுதிகளில் 51 முகாம்களும் நடைபெற்று வருகின்றன. 

இம்முகாம்களில் மருத்துவ சேவைகளும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பப் படிவங்களும் வழங்கப்படுகின்றன. பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை (29.08.2025) நடைபெறும் முகாம்கள்:

  • திருப்பெரும்புதூர் நகராட்சி, சென்னை மெயின் ரோடு, கோதண்ட நாடார் குணசீலியம்மாள் திருமண மண்டபம் (வார்டு எண். 9, 10)
  • காஞ்சிபுரம் வட்டம், கூரம், கருணீகர் தெரு, சிங்கம் செட்டி சாரிட்டீஸ் திருமண மண்டபம் (கூரம், ஆரியபெரும்பாக்கம் ஊராட்சிகளுக்கும்)
  • திருப்பெரும்புதூர் வட்டம், மொளச்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகில் (மொளச்சூர் ஊராட்சிக்கும்)
  • குன்றத்தூர் நகர்ப்புற பஞ்சாயத்து, பரணிபுத்தூர், சீனிவாசபுரம், R.R. நகர், செல்வராணி மண்டபம் (பரணிபுத்தூர் ஊராட்சிக்கும்)

பொதுமக்கள் தங்கள் குறைகளை உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

 



English Short News:

In Kanchipuram district, as part of the “Ungaludan Stalin” (With You Stalin) scheme, a total of 224 grievance redressal camps are being conducted across urban and rural areas. Following the first phase of 78 camps, the second phase runs from August 19 to September 12. On August 29, 2025, camps will be held at Thiruperumbudur (Gunaseeliyammal Mandapam), Kooram (Singam Chetti Charities Hall), Molachur (near Panchayat Union Primary School), and Kundrathur (Selvarani Mandapam, Paraniputhur). Citizens are encouraged to attend with necessary documents to submit petitions.


No comments

Thank you for your comments