திருப்பெரும்புதூரில் “மாபெரும் தமிழ்க் கனவு” நிகழ்ச்சி – உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி நூல் வழங்கல்
தமிழ் இணையக் கல்விக்கழகம் உயர்கல்வித் துறையுடன் இணைந்து “மாபெரும் தமிழ்க் கனவு” என்னும் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வைக் கடந்த 2022-23, 2023-24 கல்வியாண்டுகளில் சிறப்பாக நடத்தி முடித்தது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 200 கல்லூரிகளில், 300 சொற்பொழிவுகள், 2,000 கல்லூரிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 2 லட்சம் மாணவர்களைச் சென்றடையும் வண்ணம் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதன் 100-வது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்நிகழ்ச்சி ஒவ்வோர் ஆண்டும் தொடர்ந்து நடத்தப்படும் என அறிவித்தார்.
உலகின் செழித்தோங்கிய பண்பாடுகளில் முதன்மையான தமிழ்ப் பண்பாட்டின் பெருமைகளையும் வளமையையும் அது எதிர்கொண்ட சவால்களையும் மாணவர்களாகிய உங்களிடம் கொண்டு சேர்ப்பதற்கானதே இந்நிகழ்வு. தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறைக்கு, குறிப்பாகக் கல்லூரி மாணவர்களுக்கு உணர்த்துவது ஆரோக்கியமான எதிர்காலச் சமூகக் கட்டமைப்பின் முக்கியமான பகுதியாகும். எனவே, தமிழ்நாடு முழுவதும் உள்ள 200 கல்லூரிகளில் தமிழர் மரபும் நாகரிகமும், உயர்தனிச் செம்மொழியான தமிழின் சிறப்பு, இலக்கியச் செழுமை, தமிழர் தொன்மை, சமூக சமத்துவம், மகளிர் மேம்பாடு, தொல்லியல் ஆய்வுகள், தொழில் வளர்ச்சி, கல்விப் புரட்சி முதலிய தலைப்புகளின் கீழ் சிறந்த சொற்பொழிவாளர்களைக் கொண்டு மாபெரும் தமிழ்க் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி நூலும், தமிழ்ப் பெருமிதம் குறித்த குறிப்பேடும் வழங்கப்பட்டுள்ளன.
இவற்றை மாணவர்கள் தவறாமல் கருத்தூன்றிப் படித்துப் பயன்பெறுமாறும், உயர்கல்வி, வேலைவாய்ப்பு, வங்கிக் கடனுதவி, தொழில் வாய்ப்பு முதலியவற்றை மாணவர்கள் அறிந்துகொள்ள உதவும் வகையில் பல காட்சி அரங்குகளும், குறிப்பாக மாணவர்கள் பயன்பெறும் வகையில் புத்தகக் கண்க்காட்சி அரங்கும் அமைக்கப்பட்டுள்ளன மாணவர்கள் இவற்றைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்கள்.
இதனை தொடர்ந்து பத்மஸ்ரீ முனைவர் நர்த்தகி நடராஜ் அவர்கள் ”கலைவண்ணம்”என்ற தலைப்பில் மாணவர்களிடம் உரையாற்றி, மாணவ/மாணவியர்களிடம் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மாணவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நிறைந்தது மனம் திட்டத்தின்கீழ் நன்றியினை தெரிவித்தார்கள். தொடர்ந்து மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகமும், தமிழ்ப் பெருமிதம் குறித்த குறிப்பேடும் வழங்கப்பட்டன. மேலும் நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ/மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்கள்.
இந்நிகழ்வினை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் ஒன்றியம், வல்லக்கோட்டையில் கனிம வள நிதியின்கீழ் ரூ.47.64 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பேவர்பிளாக் சாலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.
English Short News:
At a private engineering college in Thiruperumbudur, Kanchipuram district, the “Mega Tamil Dream” cultural awareness programme was inaugurated by District Collector Kalaichelvi Mohan, IAS. Organized by the Tamil Virtual Academy, the event focused on Tamil heritage, literature, and social values. Padma Shri Dr. Narthaki Nataraj delivered a special lecture on “Kalaivannam.” Students received guidance books on higher education, employment, and Tamil pride. Winners of competitions were felicitated. Later, the Collector inspected a ₹47.64 lakh paver block road project at Vallakottai under the District Mineral Foundation Fund.
No comments
Thank you for your comments