காஞ்சிபுரம் பொன்னேரி கரையில் ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்கம் சார்பில் சுதந்திர தினக் கொண்டாட்டம்
காஞ்சிபுரம், ஆக.15:
சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் எம். எஸ். சுகுமார் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய துணைச் செயலாளர் ரமேஷ், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பால்சன், கிளை கழக செயலாளர் விஸ்வநாதன், ஆட்டோ சங்க தலைவர் ராஜன், செயலாளர் அருண் ராஜ், பொருளாளர் மணிகண்டன், துணைத் தலைவர் சதீஷ், துணைச் செயலாளர் கோபி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments
Thank you for your comments