காஞ்சிபுரம் மாவட்டம் மெளலிவாக்கத்தில் புதிய காவல் நிலையம் – அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைப்பு
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்டம்,குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட மெளலிவாக்கம் காவல் நிலையம் மாங்காடு காவல் நிலையத்திலிருந்து பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதனால் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை கருத்தில் கொண்டு 13.09.2021 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில் மெளலிவாக்கம் என்ற புதிய காவல் நிலையம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்கள்.
அதன்படி காவல் நிலையம் துவங்குவதற்காக செலவினமாக ரூ.2,74,45,750/- (ரூபாய் இரண்டு கோடியே எழுபத்து நான்கு லட்சத்து நாற்பத்து ஐந்தாயிரத்து எழுநூற்று ஐம்பது மட்டும்) அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது.
மெளலிவாக்கம் காவல் நிலையமானது 06 தாய் கிராமங்களையும், 2 குக்கிராமங்களையும் உள்ளடக்கியதாக 20 சதுர கீ.மீ பரப்பளவு கொண்டதாகவும் அமைந்துள்ளது.
இக்காவல் நிலையம், 1 ஆய்வாளர், 2 உதவி ஆய்வாளர்கள், 2 தலைமைக் காவலர்கள், 9 முதல் நிலை காவலர்கள், மற்றும் 17 இரண்டாம் நிலை காவலர்கள் என மொத்தம் 31 காவலர்களுடன் இயங்க உள்ளது.
மேலும் தற்காலிகமாக நகராட்சிக்கு சொந்தமான அங்கன்வாடி கட்டிடத்தில் தொடங்கப்பட்டுள்ள காவல் நிலையத்திற்கு விரைவில் தனி கட்டிடம் கட்டப்படும்.
மெளலிவாக்கம் காவல் நிலைய வரம்பிற்குள் மக்கள் தொகையானது 1 இலட்சத்தைவிட அதிகமாகவும், காவல் நிலைய எல்லைக்குள் 12 கல்வி நிலையங்கள், 19 வழிபாட்டு தலங்கள், 8 பெரிய தொழிற்சாலைகள் ஆகியவை அமைந்துள்ளது.


No comments
Thank you for your comments