Breaking News

எஸ்.பி.ஓ.ஏ. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான சாம்பியன்ஸ் 2025 -2026 போட்டி..!

கோவை, சொக்கம்புதூர் எஸ்.பி.ஓ.ஏ. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கோவை மாவட்ட அளவிலான "சாம்பியன்ஸ் 2025" என்னும் தலைப்பில் பள்ளிகளுக்கு இடையேயான பல்துறை சார்ந்த போட்டிகள் எஸ்.பி.ஓ.ஏ. பள்ளிகளின் தாளாளர் எம். முருகேசன் தலைமையில் நடைபெற்றது‌.


சிறப்பாக நடைபெற்ற பல்வேறு திறன் சார்ந்த போட்டிகளுக்கு பள்ளியின் முதல்வர் சபுரால் பானு இப்ராஹீம் முன்னிலை வகித்தார்.பல்வேறு தகுதிச் சுற்றுகளாக நடைபெற்ற போட்டிகளில் ஏராளமான மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள். 


இந்த போட்டிகளானது மாணவ செல்வங்களின் உள்ளார்ந்த தனித் திறனைக் கண்டறியவும், அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தவும் இந்நிகழ்வு உறுதுணையாகவும் ஒரு வாய்ப்பாகவும் அமைந்தது குறிப்பிடத்தக்கது.


கோவை மாவட்டத்தை சேர்ந்த 10கும் மேற்பட்ட மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் முழுமையான ஆர்வத்துடன் சவாலான போட்டிகளிலும் பங்கேற்று அசத்தினர். 

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிறைவுவிழாவில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்குச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் கேடயங்களை எஸ்.பி.ஓ.ஏ. பள்ளிகளின் தாளாளர் எம்.முருகேசன் வழங்கி சிறப்பித்தார்.

கோவை மாவட்ட அளவிலான நடைபெற்ற சாம்பியன்ஸ் 2025ற்க்கான கோப்பையை கோயம்புத்தூர் ஜி.டி. பள்ளி ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் சுழற் கோப்பையை தட்டிச் சென்றது.

இது குறித்து தாளாளர் மற்றும் பள்ளி முதல்வர் குறுகையில் எஸ்.பி.ஓ.ஏ. "சேப்பியன்ஸ் 2025" நிகழ்ச்சியானது மாணவ செல்வங்களின் மனதை தூண்டி, நிலையான வளர்ச்சி, குழந்தைகளின் ஆர்வம் மற்றும் இலக்குகள், மாணவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்த வாய்ப்பாகவும் சிறந்த களமாகவும் அமைந்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. 

இந்த நிகழ்ச்சியானது மிகப்பெரிய மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது என்று கூறினார்கள்.

No comments

Thank you for your comments