இழப்பீட்டு நிலுவைத் தொகை வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி
காஞ்சிபுரம், ஆக.28:
காஞ்சிபுரத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு அண்ணாமலை என்பவர் அரசுப்பேருந்து மோதிய விபத்தில் உயிரிழந்தார்.அவரது வாரிசுதாரர்களான தேவி, முரளி மற்றும் வேல்முருகன் ஆகியோர் மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கான நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
எதிர்மனுதாரரான அரசு போக்குவரத்துக் கழகம் இழப்பீட்டுத் தொகையை பகுதி,பகுதியாக செலுத்தி வந்த நிலையில் ரூ.58,117 நிலுவையாக இருந்துள்ளது.இத்தொகையுடன் வட்டித்தொகை ரூ.65,341 சேர்த்து மொத்தம் ரூ.1,25,500 மனுதாரருக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இத்தொகையை அரசு போக்குவரத்துக்கழகம் செலுத்தாமல் இருந்து வந்த காரணத்தால் உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றக்கோரும் மனு தாக்கல் செய்ததால் எதிர்மனுதாரருக்கு சொந்தமான அரசுப் பேருந்தை ஜப்தி செய்யுமாறு உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசுப்பேருந்தினை நீதிமன்ற பணியாளரும்,வாரிசுதார்களும் இணைந்து ஜப்தி செய்து நீதிமன்ற வளாகத்தில் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.


No comments
Thank you for your comments