காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 22-ஆம் தேதி விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்
காஞ்சிபுரம் :
இந்த கூட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையேற்க உள்ளார். கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலைய வல்லுநர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்று, விவசாயிகள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளித்து ஆலோசனைகளையும் வழங்க உள்ளனர்.
மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்களின் பயனை விவசாயிகள் பெறுவதற்காக, தனித்த தேசிய விவசாய அடையாள எண் (DFR) வழங்கப்படுகிறது. இதற்காக விவசாயிகள் தங்கள் ஆதார் அட்டை, ஆதாருடன் இணைக்கப்பட்ட கைபேசி எண் மற்றும் கம்ப்யூட்டர் சிட்டாவுடன், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறையின் களப்பணியாளர்களை அணுக வேண்டும்.
மேலும் நுண்ணீர் பாசன திட்டத்தில், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100% மானியம், இதர விவசாயிகளுக்கு 75% மானியம் வழங்கப்படுகிறது.
இதற்காக சிட்டா, ஆதார் அட்டை, நீர் பரிசோதனை அறிக்கை, நில வரைபடம், விவசாயி புகைப்படம் மற்றும் அடங்கல் உள்ளிட்ட ஆவணங்களுடன் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை விவசாயிகள் அணுகலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
No comments
Thank you for your comments