அதிமுக பொதுச்செயலாளர் இன்று காஞ்சிபுரம் வருகை, விவசாயிகள்,நெசவாளர்களை சந்தித்து பேசுகிறார்
காஞ்சிபுரம், ஆக.20:
இது குறித்து அவர் மேலும் கூறியது..
முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் எழுச்சிப்பயணத்தை தொடங்கி திமுக அரசின் மக்கள் விரோத செயல்களை எடுத்துக் கூறி வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரத்தில் சென்னை}பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நெசவாளர்கள், விவசாயிகள், வணிகர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து பேசுகிறார்.
பின்னர் மாலை காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயில் அருகில் சிறப்புரையாற்றுகிறார்.
பின்னர் வாலாஜாபாத் பேருந்து நிலையம்,ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் ஆகியனவற்றிலும் சிறப்புரையாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கழக பொதுச் செயலாளரின் எழுச்சி மிகு காஞ்சிபுரம் மாவட்ட சுற்றுப்பயணத்தில் முன்னாள் எம்எல்ஏக்கள், கழகத்தின் அனைத்துப்பிரிவு நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக தொண்டர்கள் உட்பட அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறும் முன்னாள் அமைச்சரும்,கட்சியின் மாவட்ட செயலாளருமான வி.சோமசுந்தரம் தெரிவித்தார்.
No comments
Thank you for your comments