Breaking News

காஞ்சிபுரத்தில் போலி மருத்துவர் கைது Fake doctor arrested in Kanchipuram

காஞ்சிபுரம், ஆக.20:

போதுமான கல்வித் தகுதி இல்லாததால் காஞ்சிபுரம் அருகே காரை கிராமத்தில் போலி மருத்துவர் ஒருவரை புதன்கிழமை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


காஞ்சிபுரம் சர்வதீர்த்தக்குளம் தெருவைச் சேர்ந்தவர் திருமலை(48) இவர் போதுமான கல்வித்தகுதி இல்லாமல் காஞ்சிபுரத்தை அடுத்த காரை கிராமத்தில் மருத்துவத் தொழில் செய்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில் சுகாதாரப் பணிகள் துறையின் இணை இயக்குநர் நளினி பொன்னேரிக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அப்புகாரின் பேரில் போலீஸôர் வழக்குப்பதிவு செய்து திருமலையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments

Thank you for your comments