கீழம்பி கிராமத்தில் சுதந்திர தின சிறப்பு கிராமசபை - ஆட்சியர் கலைச்செல்வி. எம்எல்ஏ எழிலரசன் பங்கேற்பு
காஞ்சிபுரம் :
சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கீழம்பி ஊராட்சியில் 2024-2025 ஆம் ஆண்டின் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் நிர்வாக பணிகள் குறித்த பதிவேட்டினை கிராம பொதுமக்கள் முன்னிலையில் வைக்கப்பட்டது.
கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் அவர்கள் 16 தீர்மானங்கள் கிராம பொதுமக்கள் முன்பு வாசித்தார். தீர்மானத்தினை பொதுமக்கள் அனைவரும் ஒரு மனதாக ஏற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் தூய்மை பணியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்கள். மேலும் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்து, உடனடி தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் திருமதி.மலர்க்கொடி குமார், மாவட்ட ஊராட்சி குழுத் துணைத்தலைவர் திருமதி.நித்தியா சுகுமார், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
No comments
Thank you for your comments