Breaking News

காஞ்சிபுரத்தில் அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா Independence Day celebrations at government offices in Kanchipuram

காஞ்சிபுரம், ஆக.15:

காஞ்சிபுரத்தில் அரசு அலுவலகங்கள்,கல்லூரிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஆகியனவற்றில் சுதந்திர தின விழாவையொட்டி வெள்ளிக்கிழமை தேசியக்கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டது.


காஞ்சிபுரம் எம்எல்ஏ அலுவலகத்தில் தேசியக்கொடியை எம்எல்ஏ எழிலரசன் ஏற்றி வைத்து தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார்.மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் முன்னிலை வகித்தார்.

பின்னர் திமுக கழக நிர்வாகிகள்,பொதுமக்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார். காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் கு.பாலசுப்பிரமணியன் முன்னிலையில் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து 10,11,12 ஆம் வகுப்புகளில் தேர்வில் சிறந்து விளங்கிய 70 மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும்,பரிசுகளும் வழங்கி பாராட்டினார்.

காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் முதல்வர் வ.அண்ணாத்துரை தேசியக் கொடியினை ஏற்றினார். தேசிய மாணவர்படை மாணவர்களின் அணிவகுப்பும் நடைபெற்றது.

மாவட்ட ஊராட்சிக்குழு அலுவலகத்தில் அதன் தலைவர் படப்பை ஆ.மனோகரன் தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார்.துணைத் தலைவர் நித்யா.சுகுமார்,திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் எம்எஸ்.சுகுமார் உட்பட மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். 

சின்னக்காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா நகரில் அமைந்துள்ள குடியிருப்போர் நலச்சங்கத்தில் அதன் தலைவர் அ.சாந்த லிங்கம் தேசியக் கொடியேற்றினார்.

ஸ்ரீகுபேரவிநாயகர் மற்றும் பக்த ஆஞ்சநேயர் கோயில் திருப்பணிக்கு நன்கொடை வழங்கியவர்களின் பெயர்கள் அடங்கிய கல்வெட்டினை ஆதி.சிவ.அருணாசலமும், சங்க நிர்வாகிகள் பெயர்கள் அடங்கிய கல்வெட்டினை சங்க செயலாளர் சு.பாஸ்கரனும் திறந்து வைத்தனர்.

}காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் அதன் முதல்வர் கே.ஆர்.வெங்கடேசன் முன்னிலையில் கல்லூரியின் செயலாளர் வி.பி.ரிஷிகேஷன் தேசியக் கொடியினை ஏற்றினார்.

கல்லூரி பேராசிரியர்கள்,மாணவர்கள் பலரும் விழாவில் கலந்து கொண்டனர். காரப்பேட்டை ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

சிறுகாவேரிப்பாக்கம் பூங்காவனம் உண்டு உறைவிடப்பள்ளியில் தியாகி லட்சுமி நாராயணனும்,உத்தரமேரூர் பாரதியார் உண்டு உறைவிடப்பள்ளியில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா தொண்டு நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரேம் ஆனந்தும் தேசியக் கொடியேற்றினார்கள்.

No comments

Thank you for your comments