காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்- அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்
காஞ்சிபுரம், ஆக.27:
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் பள்ளி,கல்லூரி மாணவ,மாணவியர்கள்,மாற்றுத் திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் ஆண்,பெண் என இருபாலரும் பங்கேற்கும் வகையில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்ட அளவில் 5 பிரிவுகளிலும் மொத்தமாக 53 வகையான போட்டிகளும்,மண்டல அளவில் 14 வகையான போட்டிகளும் உட்பட மொத்தம் 67 வகையான போட்டிகள் நடைபெறவுள்ளது.இப்போட்டிகள் ஆக.26 செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டு வரும் செப்.10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இப்போட்டிகளில் பங்கேற்க காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்களது பெயர்களை முன்பதிவு செய்துள்ளனர்.
இப்போட்டிகளில் மாவட்ட,மண்டல அளவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.3 ஆயிரமும்,2 வது பரிசு ரூ.2 ஆயிரமும்,3 வது பரிசு ரூ.!000மும் வழங்கப்படவுள்ளது.
மாநில அளவில் தனிநபர் போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.ஒரு லட்சமாகவும்,2 வது பரிசு ரூ.75 ஆயிரமாகவும்,3 வது பரிசு 50 ஆயிரம் ஆகவும்வழங்கப்படவுள்ளது.குழுப்போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவோர்களுக்கு முதல் பரிசுத்தொகை ரூ.75 ஆயிரம், வது பரிசு ரூ.50 ஆயிரம்,3 வது பரிசு ரூ.25 ஆயிரம் ஆகவும் வழங்கப்படவுள்ளது.
அமைச்சருடன் எம்பி க.செல்வம்,எம்எல்ஏக்கள் க.சந்தர்,எழிலரசன் ஆகியோரும் போட்டியாக விளையாடினார்கள்.தொடக்க விழாவிற்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தார்.
விழாவில் காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ்,ஒன்றியக் குழுவின் தலைவர் மலர்க்கொடி குமார்,மாவட்ட ஊராட்சிக் குழுவின் துணைத் தலைவர் நித்யா.சுகுமார் ஆகியோர் உட்பட உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள்,அரசு அலுவலர்கள்,விளையாட்டு வீரர்கள்,பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.நிறைவாக மாவட்ட விளையாட்டு அலுவலர் கோ.சாந்தி நன்றி கூறினார்.



No comments
Thank you for your comments