Breaking News

இளமை நகர் பகுதியில் 20 நாட்களில் சிமெண்ட் சாலை – திறந்து வைத்தார் எம்எல்ஏ சுந்தர்


காஞ்சிபுரத்தில் பொதுமக்கள் கோரிக்கை வைத்த 20 நாட்களில் சிமெண்ட் சாலை அமைத்து அதனை திறந்து வைத்தார்  சட்டமன்ற உறுப்பினர் சுந்தர். 



உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இளமை நகர் பகுதியில் நூறு குடும்பங்களுக்கு மேற்கு வசித்து வரும் நிலையில் முறையான சாலை வசதி இல்லாததால் மூத்த குடிமக்கள் பள்ளி மாணவர்கள் மழைக் காலங்கள் பெரிதும் பாதிக்கப்படுபவதாகவும்,  அப்பகுதிக்கு சிமெண்ட் காலை அமைத்து தர பூரணியில் தமிழ்நாடு நிகழ்வில் மக்கள் எம்எல்ஏ சுந்தரிடம் கடந்த 20  தினங்களுக்கு கோரிக்கை முன்வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் சாலை அமைக்க தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 12 லட்சம் நிதி ஒதுக்கி பணிகள் தொடங்கி நிறைவு பெற்ற நிலையில் இன்று அதனை சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். 

கோரிக்கை வைத்த 20 நாட்களில் பணிகளை நிறைவு செய்த எம்எல்ஏவுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், இளைஞரணி செயலாளர் யுவராஜ் , திமுக ஒன்றிய செயலாளர் குமார்,  மாமன்ற உறுப்பினர் சரளா சம்பத் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments