ஜேகே டயர் நோவிஸ் கோப்பை ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி கோப்பைக்கான கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தயம்..!
28வது ஜேகே டயர் ரேசிங் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக, இந்த இரண்டு பிரிவுகளிலும் பரபரப்பான பந்தயங்கள் நடைபெற்றன, வார இறுதியில் முடிவடைந்த முதல் சுற்றில் அனிஷ் ஷெட்டி மற்றும் புவன் போனு ஆகியோர் தங்கள் திறமைகளை சிறப்பான முறையில் வெளிப்படுத்தினார்கள்.
ராயல் என்பீல்ட் கான்டினென்டல் ஜிடி கோப்பை மோட்டார் சைக்கிள் போட்டியில் அனிஷ் தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி போட்டியில் ஆதிக்கம் செலுத்தினார். ஹூப்ளியில் பிறந்து பெங்களூருவில் வசித்து வரும் அனிஷ் இந்த போட்டியில் வெல்வதற்காக கடும் பயிற்சிகளை மேற்கொண்டார். சுமார் 200 கிலோ எடைகொண்ட மோட்டார் சைக்கிளை லாவகமாக ஓட்டி 3 போட்டிகளிலும் தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார்.
இந்த நிலையில் அனிஷுடன் இணைந்த புதுமுகம் மும்பையைச் சேர்ந்த சிறுவன் கயான் ஜூபின் படேல்.கயான் அனிஷைப் போல வேகமாக இல்லை என்ற போதிலும்,வார இறுதியில் நடந்த மூன்றாவது பந்தயத்தில் முந்தைய சீசனின் நடப்பு சாம்பியனான நவநீத் குமாரை இரண்டாவது இடத்திற்கு தள்ளி முதல் இடத்திற்கு கயான் முன்னேறினார்.
ஒட்டுமொத்தமாக, புள்ளிப்பட்டியலில், அனிஷ் ஷெட்டி 30 புள்ளிகளுடன் முன்னணியில் உள்ளார். கயான் 19 புள்ளிகளுடனும், நவநீத் 12 புள்ளிகளுடனும் உள்ளனர்.
2 நாள் நடைபெற்ற இந்த போட்டிகள் உள்ளூர் ரசிகர்களை மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த அனைத்து ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.


No comments
Thank you for your comments