தலித் கிறிஸ்தவர்களின் உரிமைக்காக செங்கல்பட்டில் துக்க தினப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மறை மாவட்ட குருக்கள் பேரவை தலைவர் அருட்தந்தை பாக்கியரெஜிஸ் அவர்களின் தொடக்க உரையோடு நடைபெற்ற இக்கூட்டத்திற்கு அருட்தந்தை எஸ்தாக்கியுஸ் வரவேற்றார். மக்கள் கண்காணிப்பகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆசீர்வாதம் நோக்கவுரை ஆற்றினார்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் தலைமை பிரதிநிதி அச்சிறுபாக்கம் எஸ்.எம்.ஷாஜஹான், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பாரதி அண்ணா, அருட்தந்தை பிரான்சிஸ், அருட்தந்தை செல்வம் ஆகியோர் உரையாற்றினர் .
இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கு கொண்டனர். பொதுக்கூட்டத்திற்கு முன்பாக மேற்படி கோரிக்கையை வலியுறுத்தி பிரம்மாண்டமான பேரணி நடைபெற்றது.



No comments
Thank you for your comments