Breaking News

காஞ்சிபுரத்தில் தலைமை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம், ஆக.13:

காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகில் காவலான் கேட் பகுதியில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்டதலைவர் சு.சுந்தர்ராஜன் தலைமை வகித்தார். 

மாநில தலைமையிட செயலாளர் ம.சுப்பிரமணி,மாநில மகளிரணி செயலாளர் த.ஹேமலதா, மாவட்ட அமைப்பு செயலாளர் பெ.முருகன், மாவட்ட மகளிரணி செயலாளர் வே.ரேவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பா.பொய்யாமொழி வரவேற்று பேசினார்.

அனைத்துப் பள்ளிகளிலும் அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் அடிப்படைப் பணியாளர்களை நியமித்தல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், பதவி உயர்வு பெறுவதில் உள்ள முரண்பாடுகளை களையக் கோருதல், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கான பணிப்பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோரிக்கைகளை விளக்கி கழக மாநில தலைவர் வா.ராதாகிருணன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பலரும் பேசினார்கள்.நிறைவாக மாவட்ட பொருளாளர் து.சங்கர் நன்றி கூறினார்.

No comments

Thank you for your comments