Breaking News

சிங்காடிவாக்கம் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

 காஞ்சிபுரம், ஆக.13:

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம், சிங்காடிவாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. க.செல்வம், மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. சி.வி.எம்.பி. எழிலரசன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு, உடனடி பரிசீலனைக்குப் பிறகு தகுதிவாய்ந்தவர்களுக்கு வகுப்பு சான்றிதழ், மின்னணு குடும்ப அட்டை, பிறப்புச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், மின்சார அட்டை, காப்பீட்டு அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், மருத்துவ சேவைகள் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பப் பதிவு பணிகளும் முகாமில் நடைபெற்றன.

“உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 224 முகாம்கள் நடைபெறவுள்ளன. ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14 வரை நகர்ப்புறங்களில் 25 மற்றும் ஊரகப்பகுதிகளில் 53 என மொத்தம் 78 முகாம்கள் நடந்து வருகின்றன. 

நாளை (14.08.2025) மாங்காடு, வேடல், எழிச்சூர், நரப்பாக்கம், பூந்தண்டலம் உள்ளிட்ட பகுதிகளில் முகாம்கள் நடைபெறவுள்ளன. பொதுமக்கள் தங்கள் குறைகளை உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

No comments

Thank you for your comments