காஞ்சிபுரத்தில் பழங்குடியின மக்களுக்கு வழிகாட்டுதல் முகாம்
காஞ்சிபுரம், ஆக.18:
காஞ்சிபுரத்தில் குழந்தைகள் கண்காணிப்பகம் தொண்டு நிறுவனம் அலுவலகத்தில் பழங்குடியின மக்களுக்கு பிறப்புச் சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை ஆகியன பெறுவது எப்படி என்பது தொடர்பான வழிகாட்டுதல் முகாம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் அருகேயுள்ள தண்டரை, மெயூர்ஓடை, சிறுபினாயூர், மலையாங்குளம், சீதாவரம், குரும்பிறை ஆகிய பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் இம்முகாமில் கலந்து கொண்டனர்.
முகாமை தலைமை வகித்து தொடங்கி வைத்த குழந்தைகள் கண்காணிப்பக நிர்வாகி து.ராஜி பேசுகையில் விழிப்புணர்வு இல்லாமை, அறியாமை காரணமாக வீட்டிலோ அல்லது மருத்துவமனையிலோ குழந்தை பிறந்ததால் அதைப்பதிவு செய்ய தவறவிட்டவர்கள் அதன் பின்னர் பிறப்புச் சான்றிதழ் பெறுவதில் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர்.
பள்ளியில் சேர்ந்த பழங்குடியின குழந்தைகள் பிறப்புச் சான்றிதழ் இல்லாததால் பள்ளியில் தொடர்ந்து படிக்க முடியாமல் இடையிலேயே படிப்பை நிறுத்தி விடுகின்றனர்.
எனவே ஆதார் அட்டை மற்றும் பிறப்புச் சான்றிதழ் எவ்வாறு பெறுவது, யாரை அணுகவேண்டும் என்பது குறித்து விரிவாக பயிற்சியளித்தார்.
முகாமிற்கு தொண்டு நிறுவன பணியாளர் தங்கவேல் முன்னிலை வகித்தார்.மற்றொரு பணியாளர் ஏழுமலை நன்றி கூறினார்.
No comments
Thank you for your comments