Breaking News

நடிகர் ரஜினிகாந்துடன் நயினார் சந்திப்பு

 சென்னை, ஆக.18-

பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பேசினார்.



நடிகர் ரஜினிகாந்த் திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான 'அபூர்வ ராகங்கள்' திரைப்படம் மூலமாக ரஜினிகாந்த் சினிமாவில் அறிமுகமானார். 'அபூர்வ ராகங்கள்' திரைப்படம் 1975-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந்தேதி வெளியானது. இந்த 50 ஆண்டுகளில் ரஜினிகாந்த் நடிப்பில் இதுவரை 171 திரைப்படங்கள் வெளியாகி உள்ளன.


திரை உலகில் சூப்பர் ஸ்டாராக உயர்ந்து, இருமுறை பத்ம விபூஷன் விருது, திரையுலகின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது உட்பட பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார். இந்த நிலையில், சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்துக்கு பல்வேறு நடிகர்களும், அரசியல் கட்சிகளின் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் ரஜினிகாந்துக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்தார்.



 

No comments

Thank you for your comments