Breaking News

காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரத்ததான முகாம்

காஞ்சிபுரம், ஆக.24:

காஞ்சிபுரம் ஒலிமுகம்மது பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தன்னார்வ ரத்ததான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சிபுரம் கிளை சார்பில் காஞ்சிபுரத்தை அடுத்த ஒலிமுகம்மது பேட்டையில் தன்னார்வ ரத்த தான முகாம் கிளையின் தலைவர் சாகுல்ஹமீது தலைமையில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையும்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சிபுரம் கிளையும் இணைந்து நடத்திய இம்முகாமிற்கு மாவட்ட துணைத் தலைவர்கள் அன்சாரி, சாகுல்,துணை செயலாளர் அப்துல்லாஹ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கிளை செயலாளர் முஜ்புர் ரகுமான் வரவேற்றார்.காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையின் ரத்த வங்கி அலுவலர் தாமரை நங்கை தலைமையிலான மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டு முகாமில் தன்னார்வத்துடன் ரத்ததானம் செய்த 91 நபர்களிடம் ரத்தம் சேகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ரத்ததானம் செய்தவர்களுக்கு மருத்துவர் தாமரை நங்கையும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்கள்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட மருத்துவ அணியின் செயலாளர் சர்புதீன் அரசு தலைமை மருத்துவமனை.யை தரம் உயர்த்த வேண்டும் என்றும் அரசு மருத்துவமனைக்கு நடமாடும் ரத்ததான வாகனம் வாங்க வேண்டும் எனவும் ரத்ததான முகாமை தொடக்கி வைத்து பேசும் போது குறிப்பிட்டார்.

No comments

Thank you for your comments