“போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு” உறுதிமொழி விழா - 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்கதிர்பூர் பகுதியில் உள்ள பி.ஏ.வி பள்ளியில் போதை பொருள் இல்லா தமிழ்நாடு, மாநில அளவிலான பெருந்துறை உறுதிமொழி ஏற்பு நிகழ்வில் இணைய வழியாக, அரசு பள்ளி மற்றும் தனியார் நிறுவன பள்ளிகளை சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்று, இணைய வழியாக உறுதிமொழி ஏற்றனர்.
பின்னர் போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் குற்ற சம்பவங்கள் குறித்த விழிப்புணர்வு நாடகங்களை மாணவர்கள் ஒன்றிணைந்து நாடகத்தை அரங்கேற்று பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.




No comments
Thank you for your comments