காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
காஞ்சிபுரம், ஆக.11:
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் இன்று (11.08.2025) நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையேற்றனர்.
மாவட்ட ஆட்சியரக மக்கள் நல்லுறவு மையத்தில், ஒவ்வொரு திங்கட்கிழமையும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உடனடியாக அனுப்பி தீர்வு காணப்படும் நடைமுறை நடைபெற்று வருகிறது.
இன்றைய கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மொத்தம் 368 மனுக்களை பெற்றுக்கொண்டு, அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அனைத்து துறை அலுவலர்களுக்கும் உத்தரவிட்டார்கள். மேலும், நேரில் குறைகளை கேட்டறிந்து தேவையான வழிகாட்டுதல்களையும் வழங்கினர்.
இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி க.ஆர்த்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு ச.ரவிச்சந்திரன், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments