Breaking News

காஞ்சிபுரத்தில் 11வது தேசிய கைத்தறி தின விழா – அமைச்சர் ஆர். காந்தி நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

காஞ்சிபுரம் கைத்தறி துறை சார்பில் நடைபெற்ற 11-வது தேசிய கைத்தறி தின விழாவில்  அமைச்சர் ஆர்.காந்தி நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம், நலத்திட்ட உதவிகளை  வழங்கினார்.

காஞ்சிபுரம் ஆகஸ்ட் 09, காஞ்சிபுரம்   மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், கைத்தறி துறை சார்பில்  நடைபெற்ற 11-வது தேசிய கைத்தறி தின விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்து, 323 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.148.32 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தும்  மற்றும் கைத்தறி கண்காட்சியை பார்வையிட்டு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் தெரிவித்ததாவது:

பொதுமக்கள் அனைவரும் கைத்தறி ஆடைகளை வாங்கி அணியுமாறும் இளம் தலைமுறையினர் கைத்தறி நெசவு தொழிலினை மேற்கொள்ள முன்வர வேண்டும் என கூறி, அனைவருக்கும் 11-வது தேசிய கைத்தறி நாள் தின  நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் கூறினார்.

தொடர்ந்து 18 நெசவாளர்களுக்கு கௌரவ விருதுகளும், 1 நெசவாளருக்கு கருணை அடிப்படையில் வாரிசுதாரருக்கு பணிநியமனம் ஆணையும், 6 நெசவாளர்களுக்கு வாரிசுதாரருக்கு வீட்டு உரிமை பத்திரபதிவு மாற்றம், 24 நெசவாளர்களுக்கு சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் (SSS) கீழ்  ரூ.32.22 இலட்சம் நலத்திட்ட உதவிகளும், 161 நெசவாளர்களுக்கு, நெசவாளர் முத்ரா திட்டத்தின்கீழ் ரூ.107.50 இலட்சம் மதிப்பிலான கடனுதவிகளும்,  25 நெசவாளர்களுக்கு முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் (OAP) கீழ் ரூ. 0.30 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும். 8 நெசவாளர்களுக்கு குடும்ப ஓய்வூதிய திட்டத்தின் (FP) கீழ் ரூ. 0.10 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், 80 நெசவாளர்களுக்கு கைத்தறி ஆதரவுத்திட்டத்தின்கீழ் (HSP)  ரூ.8.20 இலட்சம் மதிப்பிலான தறி உபகரணங்களும்  கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்  வழங்கினார். 

இந்நிகழ்வில்,  மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம்  ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி குமார், மாவட்ட ஊராட்சி குழுத் துணைத்தலைவர் நித்தியா சுகுமார், கைத்தறி துறை துணை இயக்குநர் ச.மணிமுத்து, முருகன் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க  உதவி இயக்குநர் தே.சத்யபாமாமுருகன் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க தலைவர் முத்து செல்வம் காஞ்சிபுரம் கைத்தறி கட்டுப்பாட்டு அலுவலர் ரே.மோகன். உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் நெசவாளர்கள் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments