காஞ்சிபுரத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்-அமைச்சர் ஆர்.காந்தி 702 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார்
காஞ்சிபுரம், ஆக.24:
காஞ்சிபுரம் எஸ்எஸ்கேவி மேல்நிலைப்பள்ளியில் சிவிஎம் அண்ணாமலை அறக்கட்டளை சார்பில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் எம்எல்ஏ எழிலரசன் ஏற்பாட்டில் நடைபெற்றது.காஞ்சிபுரம் எம்பி க.செல்வம், மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ், மாநகர செயலாளர் சிகேவி தமிழ்ச்செல்வன் ஆகியோர் குத்து விளக்கேற்றி வேலைவாய்ப்பு முகாமை தொடக்கி வைத்தனர்.
முகாமில் 75 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் மனித வள மேம்பாட்டு அலுவலர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான வேலைநாடுநர்களிடம் நேர்காணல் நடத்தினார்கள்.}காôஞ்சிபுரம், ராணிப்பேட்டை,செய்யாறு, வந்தவாசி உட்பட பல பகுதிகளிலிருந்து சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைநாடுநர்கள் பங்கேற்றிருந்தனர்.
முகாமில் குடிநீர் வசதி,நடமாடும் கழிப்பறை வசதி,மருத்துவ முகாம் ஆகியனவும் அமைக்கப்பட்டிருந்தன.
முகாமில் மாவட்ட ஊராட்சிக் குழுவின் துணைத் தலைவர் நித்யா.சுகுமார், மாவட்ட திமுக பொருளாளர் சன்பிராண்ட். ஆறுமுகம், திமுகவின் பகுதி செயலாளர்கள், அறக்கட்டளை நிர்வாகிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.




No comments
Thank you for your comments