Breaking News

கோவை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தடகள போட்டிகள்...!

கோயமுத்தூர் மாவட்ட தடகள சங்கம் மற்றும் அம்ருத் ஆர்கானிக்ஸ் 64-வது ஜீனியர் அத்லெடிக் மீட் 9வது மயில்சாமி நினைவு மற்றும் 4வது சங்கரன் நினைவு சீனியர் அத்லெடிக் மீட் 2025 மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் கோயமுத்தூர் வடவள்ளி இணைந்து நடத்திய தடகள போட்டிகள் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.



இதில் மாவட்ட அளவில் இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சிடிஏஏ செயலாளர் சம்சுதீன், பொருளாளர் ஜான் சிங்கராயர் ஆகியோர் தலைமை வகித்தனர்.தடகளப் போட்டிகளில் துவக்க விழாவில் ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் வடவள்ளி தலைவர் ரோட்டரியன் சரவணன், செயலாளர் ரோட்டரியன் சஞ்சய், அம்ருத் ஆர்கானிக்ஸ் சிஇஒ ராஜேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தேசியக்கொடி அணிவகுப்பை ஏற்றுக்கொண்டு ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி போட்டிகளை துவக்கி வைத்தனர்.

இரண்டு நாட்களாக பல்வேறு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டிகளில் 1400 கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுதினர்.இதில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கு சிடிஏஏ தலைவர் லீமா ரோஸ் மார்ட்டின் மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மாவட்ட ஆளுநர் ரோட்டரியன் செல்லா கே.ராகவேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் கனேஷ்குமார், சிடிஏஏ துணைத்தலைவர் சரவணகாந்தி , தொழில்நுட்ப தலைவர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தது குறிப்பிடதக்கது. 

இந்நிகழ்ச்சியில் தடகள சங்கத்தின் துணைச் செயலாளர்கள் நிஜாமுதீன், நந்தகுமார்,தொழில் நுட்பத் துணைத் தலைவர் சிவக்குமார், துணைத் தலைவர் சரவணா காந்தி,மேலாளர் தர்மராஜ், ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் வடவள்ளி மெம்பர்கள் சதீஷ், சரவணன், ரகுபதி, கருணாகரன் மற்றும் பயிற்சியாளர்கள் , சங்க நிர்வாகிகள் மாணவ மாணவியர் கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments