Breaking News

சிவசேனா கட்சி தமிழக தலைமை ஒருங்கிணைப்பாளர் மா.முருகன் ஏற்பாட்டின் பேரில் விநாயகர் சிலை பிரதிஷ்டை விழா..!


கோவை மாநகர் மாவட்டம் சார்பில் கோவை மண்டல தலைவர் பி.ஹரிஹரன் தலைமையில் மாநில அமைப்பு செயலாளர் டி.செந்தில், கோவை மாவட்ட தலைவர் எ.நாகராஜன் ஆகியோர் முன்னிலையில் ஆர்.எஸ்.புரம் சிவ சேனா கட்சி தலைமை அலுவலகம் அருகில் சிவ சேனா கட்சி தமிழ்நாடு தலைமை ஒருங்கிணைப்பாளர் மா.முருகன் ஏற்பாட்டின் பேரில் விநாயகர் சிலை பிரதிஷ்டை விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்த சிறப்பு வாய்ந்த விநாயகர் சிலை பிரதிஷ்டை விழாவில் திருப்பதி தேவஸ்தான புரேகிதர் கணபதி ஹோமம் மற்றும் வேள்வி நடத்தினார். இவ்விழாவில் கோவை மாவட்ட செயலாளர் எஸ். பி. மாரி செல்வம் வரவேற்புரை ஆற்றினார்.

இந்த விநாயகர் சதுர்த்தி முதல் நாள் நிகழ்ச்சிகளாக பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்குதல் மாலையில் ஆன்மீகம் இன்னிசை கச்சேரி நடைபெற்றது. பின்னர் கட்சேரி குழுவினருக்கு சிவ சேனா கட்சி சார்பில் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.



இந்நிகழ்ச்சி குறித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் மா.முருகன் கூறுகையில் 

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் தெரிவித்தார். பின்னர் சிவசேனா கட்சி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா மிகப் பிரம்மாண்டமாகவும் வெகு விமர்சியாகவும் கொண்டாடி வருகின்றோம் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு பொதுமக்கள் வழிபாட்டிற்கு திறக்கப்பட்டது.அனைத்து பொதுமக்களும் சிறந்த முறையில் தரிசனம் செய்து வருகின்றனர் இசைக்கச்சேரி மிகச் சிறப்பாக நடைபெற்றது. 

மேலும் 5 நாட்களும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் பரதநாட்டியம் நாட்டுப்புற ஆடல் பாடல் மற்றும் வள்ளி கும்மி ஒயிலாட்டம் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது 

எனவே பொதுமக்கள் பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சிகளை சார்ந்தவர்கள் குழந்தைகள் என அனைவரும் இறையன்போடு விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி மகிழ வேண்டும் என்று கூறினார்.இந்நிகழ்ச்சியில் சிவசேனா கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் முக்கிய பிரமுகர்கள் அரசியல்வாதிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments