Breaking News

நலன் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாமினை கலெக்டர் கலைசெல்வி நேரில் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் இன்று (23.08.2025) நடைபெற்ற  “நலன் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாமினை  மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை மயிலாப்பூர் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் “நலன் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாமினை அனைத்து மாவட்டங்களிலும் துவக்கி வைத்ததையொட்டி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 'நலம் காக்கும் ஸ்டாலின்' சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது.

இம்முகாமில் அடிப்படை மற்றும் உயர்நிலை மருத்துவப் பரிசோதனைகளுடன் முழுமையான உடல் ஆரோக்கியப் பரிசோதனைகளும், உயர் இரத்த அழுத்தம். நீரிழிவு நோய், மின் இதய வரைபடம். எக்கோ. அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், எக்ஸ்ரே முதலியவையும், காசநோய் மற்றும் தொழுநோய் கண்டறியும் பரிசோதனைகளும். ஆரம்ப கட்ட புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளும்,  மேலும் பதினைந்து துறைகளைச் சார்ந்த நிபுணர்களின் மருத்துவ ஆலோசனைகளும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டத்தின் அரசு கீழ் பதிவு அங்கீகார சான்றிதழ் வழங்குதல் மட்டுமின்றி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பிரச்சாரமும் வழங்கப்பட்டு வருகிறது. 

மேலும் 40 வயதிற்கு மேற்பட்டோர். நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மன நல பாதிப்புடையோர்,  இதய நோயாளிகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள். வளர்ச்சிக் குன்றிய குழந்தைகள், மாற்றுத்திறன் கொண்டவர்கள். பழங்குடியினர் மற்றும் சமூக, பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்கள் ஆகியோரை இலக்காகக் கொண்டு இம்முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அதனை தொடர்ந்து இன்று திருப்பெரும்புதூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற  “நலன் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாமினை  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, முகாமில்  அளிக்கப்படும் சிகிச்சை முறை மற்றும் பரிசோதனைகளை ஆய்வு மேற்கொண்டு, 10 மாற்றுத்திறனாளி  பயனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள் மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகளும் (UDID)    வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் திருப்பெரும்புதூர் சார் ஆட்சியர்  திருமதி.ந.மிருணாளினி, இ.ஆ.ப., இணை இயக்குநர்  (மருத்துவப் பணிகள்)  மரு.எம்.ஹிலாரினா ஜோசிட்டா நளினி, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.த.ரா செந்தில், மருத்துவ குழுவினர், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments