Breaking News

ஆக.30-ல் அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம்

சென்னை: 

அ​தி​முக மாவட்ட செய​லா​ளர்​கள் ஆலோ​சனைக் கூட்​டம் வரும் ஆக.30-ம் தேதி சென்​னை​யில் நடை​பெறுகிறது. தமிழக சட்​டப்​பேரவை தேர்​தல் பணி​களை பல்​வேறு அரசி​யல் கட்​சிகள் இப்​போதே தொடங்​கி​யுள்​ளன.


அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தொகு​தி​வாரி​யாக பிரச்​சா​ரத்​தையே கடந்த ஜூலை மாதம் தொடங்​கி​விட்​டார். 3-ம் கட்ட பிரச்​சா​ரத்தை  நிறைவு செய்த பழனி​சாமி,  செப்​.1-ம் தேதி முதல் 4-ம் கட்ட பிரச்​சா​ரத்தை மதுரை​யில் தொடங்​கு​கிறார். 

இதனிடையே வரும் ஆக.30-ம் தேதி மாவட்ட செய​லா​ளர்​கள் ஆலோ​சனைக் கூட்​டத்​தை​யும் பழனி​சாமி கூட்​டி​யுள்​ளார். அதன்​படி, ஆக.30-ம் தேதி, காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டை​யில் உள்ள அதி​முக தலைமை அலு​வல​கத்​தில், ஆலோ​சனைக் கூட்​டம் நடை​பெற உள்​ளது.

இக்​கூட்​டத்​தில் கட்சி வளர்ச்​சிப் பணி​கள், மீதம் உள்ள தொகு​தி​களில் பிரச்​சா​ரம் மேற்​கொள்​வதற்​கான ஏற்​பாடு​கள், கட்​சி​யில் இளைஞர்​களை அதிக அளவில் சேர்ப்​பது, ஐடி விங்​-ன் செயல்​பாடு​கள் உள்​ளிட்​டவை குறித்து விவா​திக்க இருப்​ப​தாக தகவல் வெளியாகி​யுள்​ளது.

மேலும், பல மாநிலங்​களில் வாக்​காளர் பட்​டியல் முறை​கேடு பூதாகரம் ஆகி​யுள்ள நிலை​யில், தமிழகத்​தில் திமுக போலி வாக்காளர்களை சேர்த்​துள்​ளதா என ஆய்வு செய்​யு​மாறு மாவட்ட செய​லா​ளர்​களுக்கு பழனி​சாமி அறி​வுறுத்த இருப்​ப​தாக கூறப்படு​கிறது.

No comments

Thank you for your comments