வித்யா மந்திர் பள்ளி சார்பில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்...!
கோவை மாவட்டம் தமிழக அரசு பள்ளி கல்வித்துறை சார்பாக பாரதியார் தினவிழா,குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் விளையாட்டு போட்டிகள் மற்றும் தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது இந்நிலையில் கோவையில் மண்டல அளவிலான சூலூர் குறுமைய விளையாட்டு போட்டிகள் அரசூர் பகுதியில் உள்ள கே.பி.ஆர்.கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
தொட்டிபாளையம் பிரிவு பகுதியில் உள்ள கோவை வித்யா மந்திர் பள்ளி ஒருங்கிணைத்து நடத்திய இப்போட்டிகளில் சூலூர் பகுதிக்கு உட்பட்ட சுமார் 60 க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர் 14,17,19 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் கைப்பந்து கால்பந்து கூடைப்பந்து,டேபிள் டென்னிஸ் மற்றும் ஓட்டப்பந்தயம்,நீளம் மற்றும் உயரம் தாண்டுதல்,குண்டு எறிதல், உள்ளிட்ட தடகள போட்டிகள் நடைபெற்று வருகின்றன .
இது குறித்து கோவை வித்யா மந்திர் பள்ளியின் தாளாளர் பிரதேவ் ஆதிவேல் கூறுகையில் மண்டல அளவில் நடைபெறும் இப்போட் டிகளில் தேர்வு செய்யப்படும் அணிகள் மற்றும் வீரர்கள் அடுத்து நடைபெற உள்ள மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள இருப்பதாக கூறினார் இந்நிகழ்ச்சியில் பயிற்சி ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments