Breaking News

ஆகாஷ் கல்வி சேவை நிறுவனத்தின் தேசிய திறன் தேர்வு ANTHE 2025 அறிமுகம்.!

கோவை மாவட்டம் ஆகாஷ் கல்வி சேவை நிறுவனம் மாணவர்கள் கொண்டிருக்கும் கனவுகளை வெற்றிகளாக மாற்றிய 16ம் ஆண்டு விழாவை முன்னிட்டு ஆகாஷ் தேசிய திறன் தேர்வு (ANTHE 2025) அறிமுகப்படு த்தியுள்ளதை மிகவும் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது இதன் அறிமுக விழா ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள ஆகாஷ் கல்வி சேவை மையத்தில் நடைபெற்றது.



இது குறித்து ஆகாஷ் கல்வி சேவைகள் லிமிடெட் (ஏஇஎஸ்எல்) தலைமை அதிகாரியும் மேலாளருமான தீபக் மேஹ்ரோத்ரா கூறுகையில் 5 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சவால்களை இந்த தேர்வுகள் மூலம் எதிர்கொள்ளலாம் இந்த வருடம் முதல், சிறந்த மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் மற்றும் ஆகாஷின் புகழ்பெற்ற Invictus கொர்ஸ் மூலம் Advanced JEE தேர்வுக்கான நுழைவுத் தேர்வான Invictus Ace Test ஐ அறிமுகப்படுத்துகிறோம்.இந்த தேர்வு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டிலும் நடத்தப்படுகிறது, இது இந்தியா முழுவதும் மாணவர்களுக்கு வசதியாகவும் சென்றடைதலும் செய்யப்படும் ANTHE 2025-ன் ஆன்லைன் பாடகம் 4 ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை இருக்கும், இதில் மாணவர்கள் தங்களுடைய வசதிப்படி ஒரு மணி நேர நேரத்தைத் தேர்வு செய்து தேர்வில் பங்கெடுக்கலாம் ஆஃப்லைன் தேர்வு 5 மற்றும் 12 அக்டோபர் 2025 அன்று 26 மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பிரதேசங்களில் உள்ள 415க்கும் மேற்பட்ட ஆகாஷ் மையங்களில் நடைபெறும் என்று தெரிவித்தார்.

No comments

Thank you for your comments