ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகம் மற்றும் புதிய சார்பதிவாளர் அலுவலம் திறப்பு...!
கோயம்புத்தூர் பதிவுத்துறை சார்பில் 4.39 கோடி மதிப்பீட்டில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் வடக்கு ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக கட்டிடம் மற்றும் தெற்கு பதிவு மாவட்டத்திற்கு புதிதாக ஒரு உருவாக்கப்பட்ட கருமத்தம்பட்டி புதிய சார்பதிவாளர் அலுவலகத்தினை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி திறந்து வைத்தார்.
இதில் மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்) மாவட்ட பதிவாளர் (தணிக்கை) அலுவலகம் மற்றும் 1என் இணை சார்பதிவாளர் அலுவலகம் ஆகிய அலுவலகங்கள் இந்த ஒருங்கிணைந்த வளாகத்தில் செயல்படும். மேலும் புதியதாக உருவாக்கப்பட்ட கருமத்தம்பட்டி சர்பதிவாளர் அலுவலகத்தில் சராசரியாக ஆண்டுக்கு 10,000 ஆவணங்கள் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இப்புதிய சர்பதிவாளர் அலுவலகம் திறக்கப்படுவதன் மூலம் பொது மக்களுக்கு விரைவான மற்றும் சிறப்பான சேவைகள் வழங்க முடியும்.
இந்நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஷில்பா பிரபாகர சதீஷ், பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் ஜி கிரியப்பனவர்,மற்றும் கழக மாவட்ட செயலாளர்கள் நா. கார்த்திக் ,தொண்டாமுத்தூர் ரவி,தளபதி முருகேசன்,மேயர் ரங்கநாயகி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசு உயர் அலுவலர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments