Breaking News

காஞ்சிபுரத்தில் மனைவி நல வேட்பு தின விழா – அன்னை லோகாம்பாள் 111வது ஜெயந்தி கொண்டாடப்பட்டது

காஞ்சிபுரம், ஆக.30:

காஞ்சிபுரம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் சனிக்கிழமை மனைவி நல வேட்பு தின விழா சனிக்கிழமை செவிலிமேடு பகுதி அதியமான் நகரில் நடைபெற்றது.




வேதாத்திரி மகரிஷி அவர்களது துணைவி அன்னை லோகாம்பாள் பிறந்த நாளான ஆக.30 ஆம் தேதியை பெண்மையின் சிறப்பை போற்றும் வகையில் அன்னை லோகாம்பாள் அவர்களின் 111வது ஜெயந்தி விழா மனைவி நல வேட்பு நாளாக ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் செவிலிமேடு அதியமான் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நிகழாண்டுக்கான மனைவி நல வேட்பு தின விழா நடைபெற்றது. 

அறக் கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஏ.இளங்கோவன் தலைமை வகித்தார்.

செயலாளர் கே.ஏ.சுப்பிரமணியன், ஆலோசகர் பி.கே.கண்ணப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அறக்கட்டளை ஆலோசகர் பி.சம்பத் வாழ்த்துரை வழங்கினார்.

விழாவில் சென்னை ராதாநகர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை செயலாளர் எஸ்.கணேசன், பேராசிரியர் பத்மாவதி கணேசன் ஆகியோர் வேதாத்திரி மகரிஷி பெண்மையின் மேன்மைகள் குறித்து பேசியதை நினைவு கூர்ந்ததுடன் குடும்பத்தை சிறப்பாக வழிநடத்துவதில் பெண்களின் பங்களிப்பு, தியாகம் ஆகியன குறித்து பேசினார். 

விழாவில் தம்பதிகள் பலரும் கலந்து கொண்டு அருகருகே அமர்ந்து கணவன் மனைவிக்கும்,மனைவி கணவருக்கும் கனி கொடுத்து காந்தப்பரிமாற்ற தவம் மற்றும் வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்.

மனைவிக்கு மரியாதை செய்யும் நிகழ்வாக விழா நடைபெற்றது.அறக்கட்டளை பொருளாளர் எஸ்.செந்தில்நாயகம் நன்றி கூறினார்.

For English:

Kanchipuram, Aug.30:


The Wife Welfare Day function was held on Saturday at Sevillimedu, Athiyaman Nagar, Kanchipuram, under the auspices of the Kanchipuram Manavalakkalai Mandram Trust.

Every year, August 30 is celebrated as Wife Welfare Day to honor the greatness of womanhood, marking the birth anniversary of Annai Lokambal, the consort of Vedathiri Maharishi. This year marks her 111th Jayanthi.

The event took place at a private marriage hall in Athiyaman Nagar. Trustee A. Ilangovan presided over the function, with Secretary K.A. Subramanian and Advisor P.K. Kannappan in attendance. Advisor P. Sampath delivered a felicitation address.

Chennai Radhanagar Manavalakkalai Mandram Secretary S. Ganesan and Professor Padmavathi Ganesan recalled Vedathiri Maharishi’s teachings on the greatness of women and emphasized their sacrifices and contributions in guiding families with harmony.

During the event, several couples participated in a symbolic ritual where husbands and wives exchanged fruits, conveying respect, blessings, and spiritual energy to one another. The program highlighted the importance of honoring wives. Treasurer S. Senthilnayagam proposed a vote of thanks.



No comments

Thank you for your comments