Breaking News

கீழம்பி ஊராட்சியில் குளம் தூய்மைப்படுத்தும் பணி - மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

காஞ்சிபுரம், ஆக.30:

காஞ்சிபுரம் அருகே கீழம்பியில் உள்ள குண்டுமணி குளத்தினை சனிக்கிழமை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்து அக்குளத்தை தூய்மைப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டார்.


காஞ்சிபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழம்பி ஊராட்சியில் அமைந்துள்ள குண்டுமணி குளத்தினை தூய்மைப் பணியை ஆட்சியர் தொடங்கி வைத்து அதில் அவரும் ஈடுபட்டதைத் தொடர்ந்து அவ்வூராட்சி பொதுமக்களும் இணைந்து குளத்தை சுத்தம் செய்தார்கள்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம், வனப்பாதுகாப்பு,நீர் நிலைகளில் ஒட்டுமொத்த தூய்மைப்பணி நிகழ்வானது தொடங்கப்பட்டது.



அதன்படி காடுகள், வனவிலங்கு வாழ்விடங்கள், மற்றும் சூற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்களைப் பாதுகாத்தல், பறவைகள் சரணாலயங்கள் உட்பட அனைத்து நீர்நிலைகளிலும் பாதுகாத்தல் சார்ந்து குளத்தை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த உறுதிமொழி கீழம்பி தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அக்கல்லூரி மாணவ,மாணவியர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் பலரும் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் க.ஆர்த்தி, காஞ்சிபுரம் ஒன்றியக் குழுவின் தலைவர் மலர்க்கொடி குமார், கீழம்பி ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி ராஜசேகர் உட்பட உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments