Breaking News

பொதுமக்கள் நலன்காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் - காஞ்சிபுரம் ஆட்சியர் வேண்டுகோள்

காஞ்சிபுரம், ஆக.31:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை தோறும் நலன்காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்களை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் கலைச்செல்வி மோகன் சனிக்கிழமை தெரிவித்தார்.


காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏகனாம்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நலன்காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமை பார்வையிட்டு அங்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் பரிசோதனைகளை ஆட்சியர் ஆய்வு செய்தார். அதன் பின்னர் அவர் கூறுகையில் 




தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. இம்முகாம்களில் அடிப்படை மற்றும் உயர்நிலை மருத்துவப் பரிசோதனைகள் முழுமையான உடல் ஆரோக்கியப் பிரசோதனைகள், ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்,மின் இதய வரைபடம்,எக்கோ, அல்டிரா சவுண்ட் ஸ்கேன்,எக்úஸரே முதலியவையும் பரிசோதிக்கப்படுகிறது.

காசநோய்,தொழுநோய் மற்றும் ஆரம்பகட்ட புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளும் நடைபெறுகிறது.15 துறைகளை சார்ந்த நிபுணர்களும் மருத்துவ ஆலோசனைகளை வழங்குகின்றனர்.

எனவே 40 வயதுக்கு மேற்பட்டோர்கள்,நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இதய நோயாளிகள், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், வளர்ச்சி குன்றிய குழந்தைகள் ஆகியோரை இலக்காகக் கொண்டு இம்முகாம்கள் நடத்தப்படுவதால் பொதுமக்கள் இந்த முகாம்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் கேட்டுக் கொண்டார்.

ஆட்சியர் ஆய்வின் போது சுகாதாரப்பணிகள் துறையின் இணை இயக்குநர் நளினி, மாவட்ட சுகாதார அலுவலர் த.ரா.செந்தில் ஆகியோர் உட்பட அரசு அலுவரர்கள், மருத்துவர்கள், பொதுமக்கள் பலரும் உடன் இருந்தனர்.



No comments

Thank you for your comments