கார்மல் கார்டன் பள்ளியில் வருடாந்திர விளையாட்டு விழா...!
கோவை இராமநாதபுரத்தில் உள்ள கார்மல் கார்டன் பள்ளியில் வருடாந்திர விளையாட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் முதன்மை விருந்தினராக மறை மாவட்ட மேதகு ஆயர் எல்.தாமஸ் அக்குவினாஸ், முதன்மைகுரு பேரருட். ஜான்ஜோசப் தானிஷ் அடிகளார், விழாவில் சிறப்பு விருந்தினராக 4வது படை அணியின் துணை தளபதி மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் கே. சுந்தர்ராஜ், பள்ளியின் முன்னாள் மாணவர் டி. நந்தகுமார், செயலாளர் ராஜ்குமார், ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜோ தன்ராஜ், மற்றும் அருட் தந்தையர்கள், அருட் சகோதரர்கள், அருட் சகோதரிகள், பள்ளியின் முதல்வர்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளியின் வருடாந்திர விளையாட்டு விழா கொண்டாட்டத்தை நேரில் கண்டு ரசித்தனர்.
இதில் மாணவ மாணவிகளுக்கு ஓட்டப்பந்தயம், சிலம்பம் சுற்றுதல், சுருள் வாள் சுற்றுதல், கராத்தே, உள்ளிட்ட பல விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் ஒன்பது வயது மாணவனின் கைகளில் 5 கார்கள் தொடர்ச்சியாக ஏறி இறங்கும் நிகழ்வும், 13 வயது மாணவனின் வயிற்றில் (புல்லட்) இரண்டு சக்கர வாகனமும் ஏற்றி இறக்கிய போது விளையாட்டு போட்டியை காண வந்திருந்த சிறப்பு விருந்தினர்களையும் பெற்றோர்களையும் மயிர் கூச்செறிய செய்தது மிக பிரம்மாண்டமாக இருந்தது.
No comments
Thank you for your comments