Breaking News

ஸ்ரீ நாராயண குரு 171வது குரு ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஸ்ரீ நாராயண குரு ஸ்போர்ட்ஸ் மீட்...!

கோவை க.க.சாவடி ஸ்ரீ நாராயண குரு கல்லூரி மைதானத்தில் கோவை ஸ்ரீ நாராயண மிஷன், ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளை மற்றும் கோவை ஸ்ரீ நாராயண குரு அறக்கட்டளை ஆகியவை இணைந்து 171வது ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி விளையாட்டுப் போட்டிகள் மிஷன் தலைவர் கே.வேலாயுதன் தலைமையில் நடைபெற்றது.

துவக்க விழாவில் கோயம்புத்தூர் கால்பந்து சங்கம் செயலாளர் என்.பி‌.அனில்குமார் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி மாணவர்கள் மத்தியில் விளையாட்டு தின உரையை நிகழ்த்தினார்.பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்.பொது கன்வீனர் என்.மோகனன் கலந்துகொண்ட அனைவரையும் வரவேற்று வரவேற்புரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில் மிஷன் பொது செயலாளர் T.S. ஹரீஷ் குமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.ஸ்ரீ நாராயண குரு மிஷன் பள்ளி மற்றும் பிற பள்ளிகளை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு தங்களது முழு திறமைகளை வெளிப்படுத்தினர்.

இது குறித்து மிஷன் பொது செயலாளர் டி.எஸ்.ஹரீஸ்குமார் கூறுகையில் 

ஸ்ரீ நாராயண குரு 171 வது குரு ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஸ்போர்ட்ஸ் மீட் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது 

ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடத்தி வருகின்றோம் 800கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் .மேலும் கோயம்புத்தூர் கால்பந்து சங்க செயலாளர் அனில்குமார் வருகை புரிந்து விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார் 

அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

நிகழ்ச்சியின் இறுதியில் கலந்துகொண்ட அனைவருக்கும் விளையாட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பி.வி.சஜீஸ்குமார் நன்றி தெரிவித்து நன்றியுரை யாற்றினார்.

No comments

Thank you for your comments