Breaking News

திருவள்ளூரில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு – நீச்சல் போட்டி தேதி மாற்றம்

2025-ஆம் ஆண்டிற்கான மாண்புமிகு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் வருகிற ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 12 வரை திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ளன. 


இந்நிலையில், பள்ளி மாணவ / மாணவியர்களுக்கான நீச்சல் போட்டி முன்னதாக ஆகஸ்ட் 27 அன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அன்றைய தினம் CBSE தேசிய மட்ட நீச்சல் போட்டி நடைபெறவுள்ளதால், இப்போட்டி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, திருவள்ளூர் மாவட்ட விளையாட்டரங்கத்திலுள்ள நீச்சல் குள வளாகத்தில், செப்டம்பர் 4 ஆம் தேதி காலை 6.00 மணிக்கு நீச்சல் போட்டி நடைபெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. மு. பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments

Thank you for your comments