திங்கட்கிழமை (18-08-2025) ராசி பலன்கள்
மேஷம்
கணவன் மனைவிக்கு இடையே புரிதல் உண்டாகும். எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும். தோற்றப்பொழிவில் மாற்றம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு சில தெளிவுகள் ஏற்படும். உழைப்புக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய அறிமுகங்கள் ஏற்படும். திடீர் திருப்பங்கள் உண்டாகும். நம்பிக்கை பிறக்கும் நாள்.
- அதிர்ஷ்ட திசை : மேற்கு
- அதிர்ஷ்ட எண் : 3
- அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அஸ்வினி : புரிதல் உண்டாகும்.
பரணி : தெளிவுகள் ஏற்படும்.
கிருத்திகை : திருப்பங்கள் உண்டாகும்.
ரிஷபம்
நெருக்கமானவர்களால் சில புரிதல்கள் ஏற்படும். மற்றவர்களில் செயல்பாடுகளில் தலையிடுவதை தவிர்க்கவும். மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவுகள் பிறக்கும். சூல்நிலைக்கு ஏற்ப வளைந்து கொடுத்து செயல்படவும். வியாபாரத்தில் போராட்டங்கள் அதிகரிக்கும். சஞ்சலமான உணர்வுகளால் மனதில் பலதரப்பட்ட குழப்பம் ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : வடக்கு
- அதிர்ஷ்ட எண் : 2
- அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : புரிதல்கள் ஏற்படும்.
ரோகிணி : தெளிவுகள் பிறக்கும்.
மிருகசீரிஷம் : குழப்பம் ஏற்படும்.
மிதுனம்
கணவன் மனைவிக்கிடையே வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். ஆடம்பரமான செலவுகளால் சேமிப்புகள் குறையும். செயல்பாடுகளில் மறைமுகமான தடைகள் தோன்றி மறையும். தடைப்பட்டு வந்த ஒப்பந்த பணிகள் சாதகமாகும். உத்தியோகத்தில் பனிப்போர்கள் தோன்றி மறையும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். ஆக்கப்பூர்வமான நாள்.
- அதிர்ஷ்ட திசை : தெற்கு
- அதிர்ஷ்ட எண் : 9
- அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு நிறம்
மிருகசீரிஷம் : வேறுபாடுகள் நீங்கும்.
திருவாதிரை : தடைகள் மறையும்.
புனர்பூசம் : பேச்சுக்களில் கவனம்.
கடகம்
குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை அறிவீர்கள். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் அமையும். கவனம் வேண்டிய நாள்.
- அதிர்ஷ்ட திசை : தெற்கு
- அதிர்ஷ்ட எண் : 2
- அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.
பூசம் : சந்திப்புகள் ஏற்படும்.
ஆயில்யம் : வாய்ப்புகள் அமையும்.
சிம்மம்
உறவுகள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருந்த பொறுப்புக்கள் குறையும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கலைப் பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். பொழுதுபோக்கு செயல்களால் கையிருப்புகள் குறையும். ஆர்வம் நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : கிழக்கு
- அதிர்ஷ்ட எண் : 1
- அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மகம் : செலவுகள் ஏற்படும்.
பூரம் : லாபகரமான நாள்.
உத்திரம் : கையிருப்புகள் குறையும்.
கன்னி
தெய்வீக பணிகளில் ஈடுபாடு மேம்படும். கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்லவும். பணி தொடர்பான பயணங்கள் கைகூடும். மனதளவில் இருந்த குழப்பங்கள் அகலும். எதிர்பார்த்து இருந்த சில உதவிகள் சாதகமாகும். புதிய துரை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். விளையாட்டு செயல்களில் ஆர்வம் மேம்படும். சிரமம் விலகும் நாள்.
- அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
- அதிர்ஷ்ட எண் : 6
- அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம்
உத்திரம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
அஸ்தம் : குழப்பங்கள் அகலும்.
சித்திரை : தேடல்கள் அதிகரிக்கும்.
துலாம்
முக்கியமான விஷயங்களில் பொறுமை காக்கவும். உயர் அதிகாரிகள் இடத்தில் விட்டுக்கொடுத்து செயல்படவும். சுப காரிய தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். நினைத்த சில பணிகளில் மாறுபட்ட அனுபவங்கள் கிடைக்கும். இறைப்பணிகளில் மனதை செலுத்துவது அமைதியை கொடுக்கும். பழைய சிந்தனைகளால் ஒரு விதமான சோர்வுகள் ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
- அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
- அதிர்ஷ்ட எண் : 6
- அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்
சித்திரை : பொறுமை வேண்டும்.
சுவாதி : அனுபவங்கள் கிடைக்கும்.
விசாகம் : சோர்வுகள் ஏற்படும்.
விருச்சிகம்
மனதளவில் இருந்த தயக்கங்கள் குறையும். சகோதரர்கள் வழியில் உதவிகள் சாதகமாகும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். போட்டிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வர்த்தக தொடர்பான சிந்தனைகள் மேம்படும். இழுபறியாக இருந்த வேலை முடியும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். நலம் நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : தெற்கு
- அதிர்ஷ்ட எண் : 9
- அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
விசாகம் : தயக்கங்கள் குறையும்.
அனுஷம் : முடிவுகள் கிடைக்கும்.
கேட்டை : தடைகள் விலகும்.
தனுசு
கனிவான பேச்சுக்களால் ஆதாயம் உண்டாகும். துணைவருடன் மனம் விட்டு பேசுவது புரிதலை அதிகப்படுத்தும். அரசு காரியங்களில் இருந்த தாமதங்கள் விலகும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். பழக்கவழக்கங்களில் சில மாற்றம் ஏற்படும். அதிகாரிகள் மூலம் சில சூட்சுமங்களை அறிவீர்கள். சுபம் நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
- அதிர்ஷ்ட எண் : 2
- அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : ஆதாயம் உண்டாகும்.
பூராடம் : தாமதங்கள் விலகும்.
உத்திராடம் : சூட்சுமங்களை அறிவீர்கள்.
மகரம்
நினைத்த செயல்களில் பொறுமை வேண்டும். எதிர்பார்த்த சில வரவுகள் சாதகமாகும். பழைய விவகாரங்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். அணுகுமுறைகளில் சில மாற்றம் உண்டாகும். செயல்களில் சிறு சிறு தடைகள் தோன்றி மறையும். இனம் புரியாத சிந்தனைகளால் மனதில் சோர்வு ஏற்படும். இரக்கம் வெளிப்படும் நாள்.
- அதிர்ஷ்ட திசை : மேற்கு
- அதிர்ஷ்ட எண் : 3
- அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
உத்திராடம் : வரவுகள் சாதகமாகும்.
திருவோணம் : மாற்றம் உண்டாகும்.
அவிட்டம் : சோர்வு ஏற்படும்.
கும்பம்
புதிய விஷயங்கள் கற்றுக் கொள்வீர்கள். புதிய வேலைக்கான உதவிகள் கிடைக்கும். வெளியூரிலிருந்து சாதகமான செய்திகள் கிடைக்கும். புத்திரர்கள் வழியில் சுப விரயங்கள் உண்டாகும். தாயின் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். வெளிவட்டார தொடர்புகள் மேம்படும். கால்நடை பணிகளில் மேன்மை உண்டாகும். ஜெயம் நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : கிழக்கு
- அதிர்ஷ்ட எண் : 1
- அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
அவிட்டம் : உதவிகள் கிடைக்கும்.
சதயம் : விரயங்கள் உண்டாகும்.
பூரட்டாதி : மேன்மை உண்டாகும்.
மீனம்
மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். தந்தை வழி சொத்துக்கள் கிடைக்கும். பண வரவுகள் அதிகரிக்கும். உறவினர்கள் வருகை உண்டாகும். பழக்க வழக்கத்தில் சில மாற்றம் ஏற்படும். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். தடைப்பட்ட கட்டிடப் பணிகள் முழுமை பெறும். சகோதரி வகையில் உதவிகள் கிடைக்கும். புகழ் நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : தெற்கு
- அதிர்ஷ்ட எண் : 2
- அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
பூரட்டாதி : நினைவாற்றல் மேம்படும்.
உத்திரட்டாதி : மாற்றம் ஏற்படும்.
ரேவதி : உதவிகள் கிடைக்கும்.
No comments
Thank you for your comments