பா.ஜ.க தெற்கு மாவட்டம் ஆர் எஸ் புரம் மண்டல் சார்பில் சுதந்திரக் கொடி ஏந்தி அணிவகுப்பு நிகழ்ச்சி ...!
கோவை மாவட்டம் 79 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி தெற்கு மாவட்டம் ஆர். எஸ்.புரம் மண்டல் சார்பில் திரங்கா யாத்திரை தேசியக்கொடி அணிவகுப்பு பேரணி ஆர்.எஸ்.புரம் மண்டல் தலைவர் பிரேம்குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்த யாத்திரை நிகழ்ச்சியில் கோவை தெற்கு மாவட்ட தலைவர் ஆர். சந்திரசேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு யாத்திரையை துவக்கி வைத்தார்.இந்த யாத்திரையானது காந்தி பார்க் ரவுண்டானாவில் துவங்கி ஆர்.எஸ்.புரம் வழியாக சாஸ்திரி மைதானத்தில் நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியில் ஓ.பி.சி அணி மாநிலத் துணைத் தலைவர் கரு முத்து தியாகராஜன், நெசவாளர் மாவட்ட தலைவர் சரண்யாரவி, மண்டல பொதுச் செயலாளர்கள் கிருஷ்ணன்,ஜெகன், மண்டல பொறுப்பாளர் செல்வராஜ் மற்றும் மாநில, மாவட்ட, மண்டல் நிர்வாகிகள் ஏராளமானோர் தேசியக்கொடியை கையில் ஏந்தி கலந்து கொண்டனர்
No comments
Thank you for your comments