குடற்புழு நீக்க மாத்திரை அனைவருக்கும் பாதுகாப்பானது - காஞ்சிபுரம் ஆட்சியர்
காஞ்சிபுரம், ஆக.11:
காஞ்சிபுரம் காமராஜர் வீதியில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி குடற்புழு நீக்க மாத்திரைகளை பள்ளி மாணவியருக்கு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்து அப்பள்ளி மாணவியர்க்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கி பேசியது..ஆகஸ்ட் 2015 முதல் தேசிய குடற்புழு நீக்க நாள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
6 மாதத்திற்கு ஒரு முறை பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் குடற்புழு நீக்க நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.நிகழாண்டுக்கான 2 வது சுற்று ஆகஸ்ட் 11 ஆம் தேதியன்று வழங்கப்படுகிறது. இதில் விடுபட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு வரும் 18 ஆம் தேதி குடற்புழு நீக்க மாத்திரையான அல்பெண்டசோல் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்கள்,அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் பயிலும் மாணவ,மாணவியர்களுக்கு வழங்கப்படவுள்ளது. கர்ப்பிணிப் பெண்களும், தாய்மார்களும் தவிர்த்து குடற்புழு நீக்க மாத்திரையானது அனைவருக்கும் பாதுகாப்பானது.
இம்மாத்திரையை நன்றாக கடித்து,மென்று,சுவைத்து சாப்பிடலாம்.அனைத்து பெற்றோர்களும் தங்களது குழந்தைகள் இந்த மாத்திரையை உட்கொண்டார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வுக்கு காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன்,மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் ,மாவட்ட சுகாதார அலுவலர்த.ரா.செந்தில்ஸ, மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில் பள்ளித் தலைமை ஆசிரியர்,ஆசிரியர்கள், மாணவியர்கள் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் உட்பட பலரும் கல்நது கொண்டனர்.




No comments
Thank you for your comments