Breaking News

காஞ்சிபுரத்தில் உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு நிகழ்ச்சி

 காஞ்சிபுரம் :

இந்திய மருத்துவச் சங்கம் (IMA) காஞ்சிபுரம் கிளை சார்பில், உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி  நகர்ப்புற சுகாதார நிலையம், பிள்ளையார்பாளையம் பகுதியில் நடைபெற்றது.



நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் (தேர்வு) தன்யக்குமார் தலைமை வகித்து, தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். சங்க செயலாளர் முத்துக்குமரன், பொருளாளர் தி. ஞானவேல், முன்னாள் தலைவர் எஸ். மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அரசு மருத்துவர் பிரேமா, “தாய்ப்பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார். சங்க துணைத் தலைவர் நிஷாப்பிரியா, தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும், சேய்க்கும் உருவாகும் பிணைப்புகள் குறித்து பேசினார்.

நிகழ்வில் பங்கேற்ற 50க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு, இந்திய மருத்துவச் சங்கம் காஞ்சிபுரம் கிளை சார்பில் பூப்போன்ற மிருதுவான வெள்ளை நிற துண்டுகள் வழங்கப்பட்டன. பெண்களின் மார்பக மற்றும் கருப்பை புற்றுநோய்களைத் தடுப்பதில் தாய்ப்பால் கொடுப்பது முக்கியம் என்பதை வலியுறுத்தினர்.

No comments

Thank you for your comments