Breaking News

காஞ்சிபுரம் அருகே சஞ்சீவிராயர் கோயில் திருப்பணி - ரூ.2.35 கோடி மதிப்பில் தொடக்கம்

காஞ்சிபுரம்,  ஆக.22:

காஞ்சிபுரம் அருகே அய்யங்கார்குளம் சஞ்சீவிராயர் கோயில் திருப்பணி ரூ.2.35 கோடி மதிப்பில் தொடங்குவதற்கான பூமி பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


காஞ்சிபுரம் அருகே அய்யங்கார் குளத்தில் பழமையான சஞ்சீவிராயர் கோயில் அமைந்துள்ளது.ஆண்டுக்கு ஒரு முறை காஞ்சி வரதராஜப் பெருமாள் இக்கோயிலுக்கு எழுந்தருளி சிறப்புத் திருமஞ்சனம் கண்டருள்வதும் வழக்கம்.

பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளையுடைய இக்கோயில் விஜயநகர பேரசர் காலத்தில் கட்டப்பட்டது.அறநிலையத்துறை பராமரிப்பில் காஞ்சிபுரம் வரதராஜசுவாமி கோயில் கட்டுப்பாட்டில் இருந்து வரும் இக்கோயில் கோபுரம்,சுற்றுச்சுவர் மற்றும் பிற பகுதிகள் சேதமடைந்த நிலையில் இருந்தன.

எனவே இக்கோயிலை புதுப்பித்து மகாசம்ப்ரோஷணம் செய்ய வேண்டும் என்று பக்தர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தியும் வந்தனர்.

இந்த நிலையில் சட்டப்பேரவை அறிவிப்பின்படி ரூ.2.35 கோடி நிதி ஒதுக்கப்பட்டு திருப்பணி தொடக்க விழா நடைபெற்றது. உத்தரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர் திருப்பணியை தொடக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் அறநிலையத்துறை இணை ஆணையர் குமாரதுரை, உதவி ஆணையர் ராஜலட்சுமி, மாவட்ட ஊராட்சிக்குழுவின் தலைவர் நித்யா சுகுமார், மாவட்ட அறங்காவலர் குழுவின் தலைவர் தியாகராஜன், கோயில் அறங்காவலர் குழு தலைவர் வ.மணிகண்டன்,திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமார் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments