வாலாஜாபாத் தாலுக்காவில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் - உத்திரமேரூர் எம்எல்ஏ கா.சுந்தர் கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்தார்.
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நகர்ப்புற பகுதிகளில் 69 முகாம்களும் ஊரகப் பகுதிகளில் 155 முகாம்கள் என 224 முகாம்கள் தொடங்கப்பட்டு வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார்
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுக்காவில் உள்ள அய்யம்பேட்டை ஏகனாம் பேட்டை பூசிவாக்கம் ஆகிய கிராம ஊராட்சிகளை சேர்ந்த 2708 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் அய்யன் பேட்டை கிராமத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
அய்யம்பேட்டை கிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் உத்திரமேரூர் தொகுதி எம்எல்ஏ க சுந்தர், காஞ்சிபுரம் எம்பி க. செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு முகாமினை தொடங்கி வைத்து பார்வையிட்டு பொதுமக்களிடமிருந்து 15 துறைகளுக்கான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய விண்ணப்ப மனுக்களை பெற்றனர்.
மேலும் பொதுமக்களிடமிருந்து பெற்ற மனுக்கள் மீது துறை சார்ந்த அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.
மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments