“உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் - MLA சி.வி.எம்.பி.எழிலரசன் துவக்கி வைத்து பார்வையிட்டார்
காஞ்சிபுரம் :
“உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் அளித்த மகளிர்கள் மாநகராட்சி வார்டு பகுதிகளான 16, 18, 19 ஆகிய வார்டு பகுதியில் வசிக்கும் குடும்பத் தலைவிகள் தங்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கடந்தமுறை விண்ணப்பிக்காமல் விட்டுவிட்டோம்.
பிறகு எப்படி விண்ணப்பம் அளிப்பது, எங்கே கொடுப்பது என தெரியாமல் இருந்த சூழ்நிலையில் அரசு அலுவலர்கள் எங்கள் வீட்டிற்கே வந்து அதற்கான விண்ணப்பத்தை அளித்து நடைபெற்று கொண்டிருக்கும் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் விண்ணப்பிக்குமாறு தெரிவித்ததை தொடர்ந்து கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு விண்ணப்பம் அளிக்க நீண்ட வரிசையில் டோக்கன் பெற்று ஒவ்வொருவராக தங்களது சுய விவர படிவத்தினை பூர்த்தி செய்து அங்கேயே இணையதளத்தில் பதிவு செய்தனர்.
இந்த முகாமினை ஏற்படுத்தி கூட்ட நெறிசலை தவிர்க்கும் பொருட்டு இரண்டு மூன்று வார்டுகளாக இணைத்து படிவம் பெற்றது மகளிர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.
மேலும் இக்கூட்டத்திற்கு அதிக பெண்கள் மற்றும் பொதுமக்கள் வரக்கூடும் என்பதற்காக சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பெற்று அவற்றில் ரத்த அழுத்தம், பொது சுகாதாரம் குறித்து பரிசோதித்து முகாமிலேயே மருந்து மாத்திரைகளை வழங்கினர்.
எனவே இந்த வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மகளிர்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
இம்முகாமில் மாநகராட்சி ஆணையர் நவேந்திரன், உதவி ஆணையர், திமுக மாநகர பகுதி கழக செயலாளர்கள் திலகர், சந்துரு, மாநகராட்சி மண்டல குழு தலைவர் சசிகலா, மாமன்ற உறுப்பினர்கள் மல்லிகா ராமகிருஷ்ணன், சாந்தி துரைராஜ், கௌதமி திருமாதாசன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments