காஞ்சிபுரம் பெரியார் நகர் பகுதியில் புதிய அங்கன்வாடி மையத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா – MLA எழிலரசன் துவக்கி வைப்பு
காஞ்சிபுரம்:
இதில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் பங்கேற்று அடிக்கல் நாட்டி,புதிய அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான பணிகளை துவக்கி வைத்தார். பின்பு பாதாள சாக்கடை திட்டத்தை துவக்கி வைத்த அவர்,புதிய வணிக வளாக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும் முன்னதாக கண்ணிகாபுரம் அருகே பகுதி நேர நியாய விலைக் கடையினையும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி வி எம் பி எழிலரசன் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாநகராட்சி ஆணையர் நவேந்திரன், மாவட்ட பொருளாளர் சன் பிராண்ட் கே. ஆறுமுகம், மண்டல குழுத் தலைவர் எஸ். சந்துரு, மாமன்ற உறுப்பினர்கள் சரவணன், பூங்கொடி தசரதன், சுந்தரி, கௌதமி திருமாதாசன், கமலக்கண்ணன், சுரேஷ் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments